நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர், ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது.

எதிரணி உறுப்பினர்கள் இணைந்து, சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பிரேரணையை ஒப்படைத்தனர்.

2026 ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட கைதிகள் சிலர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதன்போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியமையாலேயே பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 2024 நவம்பர் 25 ஆம் திகதிய 2412/ 08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் நீதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல், சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்பு, சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நெரிசலைக் குறைத்தல் ஆகிய பணிகளைப் பொறுப்புடன் நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அது தொடர்பான பிரச்சினைகள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஜீவன், மனோ, திகா, ராதா கையொப்பமிடவில்லை!  
 
நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹரஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டது. 
 
எதிரணியில் உள்ள 37 எம்.பிக்கள் இதில் கையொப்பம் இட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலையக எம்.பிக்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கையொப்பம் இடவில்லை.
இதொகா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும் கையொப்பம் இடவில்லை.
 




Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles