கண்டி பெரஹராவிற்கு சர்வதேச புலமைச்சொத்து பாதுகாப்பு: சிறப்புக்குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி

உலக புலமைச் சொத்து அமைப்பின் (World Intellectual Property Organization – WIPO) அபிவிருத்தி மற்றும் புலமைச் சொத்துக்கள் தொடர்பான குழு ‘புலமைச் சொத்துக்கள் மூலம் உற்சவங்களுக்கான சுற்றுலாத்துறை மேம்படுத்தல்’ எனும் பெயரிலான கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரப் பண்பாட்டு மரபுரிமைகளுக்கு மதிப்பளித்து, உற்சவங்களுக்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக புலமைச் சொத்துக்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காக அனுகூலங்களைப் பெறுகின்ற நாடுகளில் உற்சவங்களை ஏற்பாடு செய்பவர்களின் இயலளவை விருத்தி செய்வதே இக்கருத்திட்டத்தின் நோக்கமாகும்.

பல நூற்றாண்டுகளாக தொடர்ந்துவந்த பாரம்பரியக் கலை வடிவங்களாலும் அறிவாலும் மெருகூட்டப்பட்ட கண்டி எசல பெரஹரா மற்றும் அதுசார்ந்த தொன்மைகள், கலாச்சாரப் பண்பாடுகள் மற்றும் மரபுவழி புலமைச் சொத்துக்களைப் பாதுகாத்தல் கருத்திட்ட முன்மொழிவொன்று, ‘புலமைச் சொத்துக்கள் மூலம் உற்சவங்களுக்கான சுற்றுலாத்துறை மேம்படுத்தல்’ எனும் கருத்திட்டத்திற்கு முன்வைக்கக்கூடிய சாத்தியவளங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, ‘வெளியீட்டு உரிமையைப் பாதுகாத்தல்’ மற்றும் ‘வர்த்தக சின்னங்கள் மற்றும் நாமம்’ போன்ற துறைகள் மீது விசேட கவனத்தைச் செலுத்தி, தொன்மைகள், கலாச்சாரப் பண்பாடுகள் மற்றும் மரபுவழி புலமைச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு இயலுமை கிட்டும் வகையில் கருத்திட்ட முன்மொழிவைத் தயாரித்து சமர்ப்பிப்பதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்களின் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் குறித்த அனைத்துப் பங்காளரங்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ளயோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles