இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை (Andrew Patrick) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (21) சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனி (Theresa O’Mahony) அவர்களும் கலந்துகொண்டார்.
இதன்போது, மலையக மக்கக்கான காணி உரிமை, அவர்களுக்கான பிரித்தானியாவின் உதவிகள், ‘டிட்வா’ புயல் ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலவிவரும் ஏனைய முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கருத்துகள் பரிமாறப்பட்டன.
பிரித்தானியத் தூதுவர் குழுவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பிற்குத் தனது நன்றியைத் தெரிவித்த ஜீவன் தொண்டமான், இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் கூட்டாண்மையையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த உரையாடல்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
