திடீர் தூண்டுதல் போராட்டங்களுக்கு இடமில்லை – ராஜ்மோகன் கருத்து!

அறவழியில், உரிய அனுமதி பெற்று மாணவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும், ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மறித்து போராட்டம் நடத்துவது ஏற்க முடியாதது என்றும் தமிழக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ‘நீர் எழில் பள்ளி’ திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திடீர் தூண்டுதலால் நடத்தப்படும் போராட்டங்கள் பொதுமக்களை பாதிப்பதால், சட்டப்படி கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வை ரத்து செய்வதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும், கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் ஜனநாயக ரீதியில் நடைபெறும் மாணவர் போராட்டங்களுக்கு மத்திய அரசு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

There is no room for sudden incited protests – Rajmohan’s opinion!

Related Articles

Latest Articles