கண்டி, – தெல்தெனிய, பன்விலை பகுதியில் உள்ள அருவிக்கு அருகில் புகைப்படம் எடுக்க முயன்றபோது 13 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்கள் விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்விலையில் உள்ள நக்கிள்ஸ்வத்த (Knuckleswatta) அருவிக்குச் சென்றபோது, செல்ஃபி எடுக்க முயன்ற வேளையில் இவ்விரு மாணவர்களும் மலையுச்சி பாறையிலிருந்து கீழே விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை முடிந்து ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று அருவியைப் பார்க்கச் சென்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட இரு சிறுவர்களும் அருவிக்கு அருகில் புகைப்படம் எடுக்க முயன்றபோதே கீழே விழுந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
