ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (23) அதிகாலை பாரிய மரம் ஒன்று வீதியின் குறுக்கே சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும், மரம் அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்து வழமைபோல் இடம்பெற்றுவருகின்றது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பூ பகுதி, (Tea Villa) விருந்தினர் விடுதிக்கு அருகில் இச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாகவே இந்த பாரிய மரம் வீதியில் சரிந்து விழுந்துள்ளது. இதனால் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – கண்டி ஆகிய பாதையூடான வாகனப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட்டனர்.

தற்போது மரம் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக ஹட்டன் வலய பொலிஸ் அத்தியாட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles