ஹட்டன்,கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பூ சந்திக்கு அருகில் இடம்பெற்ற லொறி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் சிகிச்சைக்காக, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று (22) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதிலில் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவினர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, லொறியில் சிக்கியிருந்த இருவரையும் மீட்டு, வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்தனர்.
லொறி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.










