நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 969 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 200 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 563 கைதிகள் உட்பட மொத்தம் 969 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 130 வீரர்களிடமும் 11 பொலிஸ் அதிகாரிகளிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

விசாரணை அதிகாரிகள் 28 உடற்கூறாய்வு அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல்களில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 21 சிறைக்கைதிகளும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles