நாட்டில் நாளை ஜூலை 24, 2026 முதல் அமுலுக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சதொச தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் நுகர்வோர் தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்ய முடியும்.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலை குறைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட விலைகள் குறித்த விபரங்களைக் கொண்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
வெங்காயம், சிவப்பு பருப்பு, கடலை, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலைகளே குறைகின்றன. விலை பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

