இன்னும் வலியை உணரவில்லை ஈரான்: பாரிய ராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப் பரிசீலிப்பு

ஈரான்மீது மிகப்பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், தெஹ்ரான் இன்னும் போதிய அளவு வலியை அனுபவிக்கவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ‘ஆக்சியோஸ்’ (Axios) செய்தித் தளத்திற்கு வியாழக்கிழமை அவர் அளித்துள்ள நேர்காணலில் ,

“ஈரான் மீது முன்னெப்பாதையும் விட மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்த நான் பரிசீலித்து வருகிறேன். இது தொடர்பான முடிவை எடுக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டேன். இதற்காக நாங்கள் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொண்ட ட்ரம்ப், எனினும் இது குறித்த இறுதி முடிவையோ அல்லது காலக்கெடுவையோ தான் இன்னும் நிர்ணயிக்கவில்லை என்றார்.

மேலும், “நான் கேட்டுக் கொண்டால் இஸ்ரேல் அடுத்த இரண்டு நிமிடங்களில் இந்தத் தாக்குதலில் இணைந்துகொள்ளும். ஆனால், நமக்கு யாருடைய உதவியும் தேவையில்லை” என்றும் ட்ரம்ப் கூறினார்.

அத்துடன், ஈரானிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், ஆனால் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அவர்கள் தற்போது தயாராக இல்லை என்றும் அமெரிக்க ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles