இளம் வயதில் அரை சதம் அடித்து சாதனை

இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான வைபவ் சூர்​வன்​ஷி, ஜிம்பாப்வே அணிக்கு எதி​ரான முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் 18 பந்​துகளில் அரை சதம் அடித்​தார்.

இதன் மூலம் சர்​வ​தேச டி20 போட்​டி​யில் இளம் வயதில் (15 வயது, 118 நாட்​கள்) அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்​தார்.

இதற்கு முன்​னர் இளம் வயதில் அரை சதம் அடித்த சாதனையை நேபாளத்​தின் குஷால் மல்லா (15 வயது 340 நாட்​களில்) நிகழ்த்​தி​யிருந்​தார். இதை தற்​போது முறியடித்து புதிய சாதனை படைத்​துள்​ளார் சூர்ய​வன்​ஷி.

ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான முதல் டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles