கட்டுக்கடங்காத காட்டுத் தீ: பிரான்ஸ், ஸ்பெயினில் 270,000 பேர் வெளியேற்றம்!

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளிலும் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், பிரான்சில் 2,00,000 பேரும், ஸ்பெயினில் சுமார் 70,000 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.

மேற்கு ஐரோப்பாவில் இந்த கோடைகாலத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை நிலவுவது தீயைக் கட்டுப்படுத்துவதைக் கடினமாக்கியுள்ளது.

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸின் சில பகுதிகளில் காட்டுத்தீ வீரியமாகப் பரவி வருவதால், வெளியேற்ற உத்தரவுகள் காரணமாக சுமார் 2,70,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலை மற்றும் சராசரியை விடக் குறைவான மழைப்பொழிவு ஆகிய காரணங்களால் தாவரங்கள் மிகவும் வறண்டு தீப்பிடிக்கும் அபாயத்தில் உள்ளதாகவும், பலத்த காற்று தீயை மேலும் விசிறி விடுவதாகவும் BBC விளக்கியுள்ளது.

மேலும், வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்த குளிர்காலம் தாவரங்கள் விரைவாக வளரக் காரணமானது. அந்தத் தாவரங்கள் தற்போது கோடை வெப்பத்தில் உலர்ந்துபோய், காட்டுத்தீ மேலும் பரவுவதற்கு ஏதுவான எரிபொருளாக மாறியுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles