சிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா: 3ஆவது போட்டி இன்று

சிம்பாப்வே அணி உடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 90ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி சிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த நாட்டு அணி உடன் டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது இந்தியா விளையாடி வருகிறது.

முன்னதாக, அயர்லாந்து (2 ஆட்டங்கள்) மற்றும் இங்கிலாந்து (5 ஆட்டங்கள்) சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை முழுவதுமாக இந்திய இழந்திருந்தது. இதில் இங்கிலாந்து அணி உடனான தொடரில் ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது.

டி20 உலக சாம்பியனான இந்திய அணியின் தொடர் தோல்வி காரணமாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், சிம்பாப்வே தொடர் மூலம் இந்தியா மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது.

சிம்பாப்வே உடனான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் (சனிக்கிழமை) இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்ரேயஸ் 25, வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்கள் எடுத்தனர். 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஜிம்பாப்வே விரட்டியது.

அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி சார்பில் பிரையன் பென்னட் 32, ரியான் 20, மருமானி 24 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் இந்தியா 90 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்திய அணிக்காக பந்து வீசிய அபிஷேக் சர்மா 3, யஷ் தாக்குர் 2, பிரின்ஸ் யாதவ் 2, ரவி பிஷ்னோய், ஷிவம் துபே, திலக் வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த தொடரின் அடுத்த ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles