உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 107(5) பிரிவின்படி, உயர்நீதிமன்ற நீதியரசரின் தற்போதைய ஓய்வு வயது 65 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய முன்மொழிவின்படி, இது 67 ஆண்டுகளாக நீடிக்கப்படும் என தெரியவருகின்றது.
அதே பிரிவின் கீழ், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 63 ஆண்டுகளில் இருந்து, 65 ஆண்டுகளாக நீடிக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சிகள், சட்டத்துறை சார் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற போதும், அரசாங்கம் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் திட்டத்தில் உள்ளது.
