உலகளவில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது

சர்வதேச நிதி நிறுவனத்தினால் (IIF-Institute of International Finance) உலகளவில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான IIF முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி (IIF Investor Relations and Debt Transparency Report), உலகளவில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, வியட்நாம் முதலிடத்தையும், பெலிஸ் இரண்டாம் இடத்தையும், மொசாம்பிக் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர் உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச நிதி நிறுவனம் (IIF) சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கடன் வெளிப்படைத்தன்மைக்கான உலகளாவிய தரவரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் நிதி ஆளுமை மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த இலங்கை தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது.

Related Articles

Latest Articles