ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி

ஈரானின் ‘கொசுப் படையை’ (mosquito fleet) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார் என ‘ஸ்புட்னிக்’ அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

” மத்திய கிழக்கு போர் மண்டலத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

ஈரான் தங்கள் ‘கொசுப் படையை’ப் பயன்படுத்திப் போரில் மிகவும் திறம்படச் செயல்பட்டு வருகிறது. இது புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு சார்ந்த விஷயம்.

நம்மிடமும் இதுபோன்ற சிறிய கப்பல்கள் உள்ளன; அதாவது, அவை எடையில் சிறியவை, ஆனால் அதிநவீன ஆயுதங்களைக் கொண்டவை,” எனவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்புட்னிக் செய்தியின்படி, ஈரானின் ‘கொசுப் படை’ என அழைக்கப்படும் இந்த அணியில் சுமார் “20 கதீர்-வகை (Ghadir-class) சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்களும் (midget submarines), பல ஆயிரம் அதிவேக ஏவுகணை படகுகள் மற்றும் தாக்குதல் படகுகளும்” அடங்கும்.

இலகுவாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கக்கூடிய இந்தப் படகுகளை ஈரானின் பாறை நிறைந்த கடலோரப் பகுதிகளில் செதுக்கப்பட்டுள்ள குகை சுரங்கங்களுக்குள் மறைத்து வைக்க முடியும்.

இதனால், அமெரிக்காவால் நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி இவற்றை அழிப்பது மிகவும் கடினம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles