லிந்துலை பகுதியில் இன்று 28 அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், லிந்துலை வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது போல்ரோ ரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.
எனினும், விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்தில் நிறுத்தப்படாமல் அங்கிருந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் சிறிய ரக கார் ஒன்றும், சிறிய ரக வேன் ஒன்றும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தகவல்களை திரட்டும் நோக்கில், குறித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்களின் காணொளிகளை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் வாகனத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மலைவாஞ்ஞன்
