பதுளை வேவெஸ்ஸ தோட்டப் பகுதியில் காட்டெருமை நடமாட்டம் அதிகரிப்பு:அச்சத்தில் மக்கள்

பதுளை பிரதேச சபைக்குட்பட்ட வேவெஸ்ஸ தோட்டத்தின் மத்திய பிரிவில் உள்ள இறப்பர் தோட்டங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இறப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், அப்பகுதியில் உள்ள பாதையை பயன்படுத்தும் பொது மக்களும் கடுமையாக அச்சமடைந்துள்ளனர்.

வேவெஸ்ஸ மத்திய பிரிவின் 14, 19 ஆம் இலக்கங்களை கொண்ட இறப்பர் தோட்டங்களிலேயே காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன.

அண்மையில் இறப்பர் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஆண் தொழிலாளி காட்டெருமைகளினால் விரட்டப்பட்டதன் காரணமாக ஓடி விழுந்து காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளார்.

பகல் நேரங்களிலும் வினீத்தகம பிரதான பாதை மற்றும் குறித்த பிரிவின் பாதைகளிலும் எவ்வித அச்சமும் இன்றி கூட்டமாக காட்டெருமைகள் நடமாடுவதால் பொதுமக்களின் இயல்பான நடமாட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமையை கருத்திற் கொண்டு வேவெஸ்ஸ தோட்ட நிர்வாகமும், பதுளை பிரதேச சபையும் காட்டெருமைகளை காடுகளுக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இறப்பர் தோட்டங்களை முறையாக பாரமாரிக்க அவற்றில் படர்ந்துள்ள பற்றைக் காடுகளை அழிக்க தோட்ட நிர்வாகம் முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

பசறை நிருபர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles