காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, பெங்களூரு மற்றும் மண்டியா ஆகிய பகுதிகளில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளைக் கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டனர்.
மேலும், திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த திரைப்படப் பேனர்களைக் கிழித்து எறிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவிட்டனர்.
கன்னட அமைப்பினரின் தீவிரப் போராட்டம் மற்றும் மிரட்டல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கர்நாடகா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










