டெங்கு நோயால் 7 மாத கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வாதுவை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.
மருத்துவர்களின் தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், தாயையோ சேயையோ காப்பாற்ற முடியாமல் போனது.
2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் 86,386 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 62 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழப்பு விகிதம் 0.07மூ ஆக உள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 30,000 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 1,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.










