அமைதிக்காக ஓடத் தயாரா? 4,000இற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் ‘கொழும்பு மரத்தான் 2026’ பதிவுகள் ஆரம்பம்!
‘அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான ஒரு அடி’ என்ற தொனிப்பொருளில், இலங்கையின் முன்னணி சர்வதேச நகர மரத்தான் போட்டியாகக் கருதப்படும் Colombo Marathon 2026 உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட மரத்தான் போட்டி 2026 செப்டம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 4,000 இற்கும் மேற்பட்ட ஓட்ட வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு வயதினரும் உடற்தகுதி நிலைகளைக் கொண்டவர்களும் பங்கேற்கும் வகையில் ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன:
முழு மரத்தான் – 42.195 கிலோமீற்றர்
அரை மரத்தான் – 21.097 கிலோமீற்றர்
10 கிலோமீற்றர்Road Race
5 கிலோமீற்றர் Fun Run
சிறுவர்களுக்கான Mini Run
போட்டிக்கான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போட்டி தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளை Colombo Marathon உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.colombomarathon.lk) பெற்றுக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு துஷார பெரேராவை 077 253 5354 என்ற இலக்கத்திலும், ஜயலால் ரத்னசூரியவை 071 812 8900 என்ற இலக்கத்திலும் தொடர்புகொள்ளலாம்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு ஆகியவை இணைந்து இந்த மரத்தான் போட்டியை ஏற்பாடு செய்கின்றன. Union Assurance பிரதான அனுசரணையாளராகவும், Elephant House முக்கிய பங்காளராகவும் செயற்படுகின்றன. மேலும் Nations Trust Bank, City of Dreams Sri Lanka, Nestomalt உள்ளிட்ட பல நிறுவனங்களும் இந்நிகழ்விற்கு ஆதரவு வழங்குகின்றன.
City of Dreams Sri Lanka வில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் அரச அதிகாரிகள், அனுசரணையாளர்கள், பங்காளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வு சர்வதேச விளையாட்டு அரங்கில் இலங்கையின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார். உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வுகளை நடத்தக்கூடிய நாடாக இலங்கையை சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்தவும் இது உதவும் என அவர் குறிப்பிட்டார்.
Colombo Marathon 2026, ஒரு விளையாட்டுப் போட்டியாக மட்டுமன்றி, அமைதி, மனிதநேயம், சர்வதேச ஒற்றுமையை முன்னிறுத்தும் இலங்கையின் பிரமாண்ட நிகழ்வாக அமையவுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலாரிலும் வெற்றி பெறுபவர்களுக்குச் சமமான பரிசுத் தொகைகள் வழங்கப்படவுள்ளன:
பரிசுத் தொகை விபரங்கள் (இலங்கை ரூபாயில் – LKR):
42 கி.மீ (முழு மரத்தான்):
1ஆம் இடம்: ரூ. 1,000,000
2ஆம் இடம்: ரூ. 800,000
3ஆம் இடம்: ரூ. 500,000
4ஆம் இடம்: ரூ. 250,000
5ஆம் இடம்: ரூ. 200,000
6ஆம் இடம்: ரூ. 150,000
7 முதல் 10ஆம் இடம் வரை: தலா ரூ. 100,000
21 கி.மீ (அரை மரத்தான்):
1ஆம் இடம்: ரூ. 500,000
2ஆம் இடம்: ரூ. 400,000
3ஆம் இடம்: ரூ. 250,000
4ஆம் இடம்: ரூ. 125,000
5ஆம் இடம்: ரூ. 100,000
6ஆம் இடம்: ரூ. 75,000
7 முதல் 10ஆம் இடம் வரை: தலா ரூ. 50,000
10 கி.மீ வீதி ஓட்டம் (Road Race):
1ஆம் இடம்: ரூ. 250,000
2ஆம் இடம்: ரூ. 200,000
3ஆம் இடம்: ரூ. 125,000
4ஆம் இடம்: ரூ. 60,000
5ஆம் இடம்: ரூ. 50,000
6ஆம் இடம்: ரூ. 35,000
7 முதல் 10ஆம் இடம் வரை: தலா ரூ. 25,000
5 கி.மீ வேடிக்கை ஓட்டம் (Fun Run):
1ஆம் இடம்: ரூ. 20,000
2ஆம் இடம்: ரூ. 15,000
3 முதல் 10ஆம் இடம் வரை: தலா ரூ. 10,000











