ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளை திறப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06 ஆம் திகதி வியாழக்கிழமை) முதல் மீண்டும் வழமை போல் இயங்கும் என மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஹட்டன் கல்வி வலய அலுவலகம் ஊடாக வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மலையகப் பகுதிகளில் நிலவிய கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்குக் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை (ஆகஸ்ட் 04, 05) ஆகிய இரு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles