குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர்புகை பிரயோகம்

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகதெரியவருகின்றது.

நேற்றிரவு குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

இன்று காலை மீண்டும் சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, சிறைச்சாலையின் மருத்துவமனை கைதிகளால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல்துறையினரால் கண்ணீர்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உடனடியாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles