ரணில் தலைமையில் நாளை மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கிறது கூட்டு எதிரணி

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது உட்பட அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கான அரசியல் போராட்டத்தைக் கூட்டு எதிரணி தீவிரமாக முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் தற்போது ஊடகச் சந்திப்புகள் மற்றும் பகிரங்க விவாதங்கள் ஊடாகக் கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதன் அடுத்த கட்டமாக, நாளை சனிக்கிழமை (08) மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து நிலைமைகளை விளக்குவதற்குக் கூட்டு எதிரணி திட்டமிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், ராஜித சேனாரத்ன, ஜீ.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்று, தற்போதைய அரசியல் சூழல் குறித்து மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்தவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தக் கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளது.

Related Articles

Latest Articles