இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு விஜய் வலியுறுத்து

இலங்கை சிறை​யில் உள்ள அனைத்து மீனவர்​கள், படகு​களை விடுவிக்க தேவை​யான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கருக்கு தமிழக முதல்​வர் விஜய் கடிதம் மூலம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து மத்​திய அமைச்​சருக்கு முதல்​வர் எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:

ராம​நாத​புரம் மாவட்ட மீனவர்​கள் 11 பேர் இலங்கை கடற்​படை​யின​ரால் சிறை பிடிக்​கப்​பட்​டு, படகும் பறி​முதல் செய்​யப்​பட்ட சம்​பவம் குறித்து தங்​கள் கவனத்​துக்கு கொண்டு வரு​கிறேன்.

இச்​சம்​பவத்​தில் இயந்​திரக்​கோளாறால் படகு நெடுந்​தீவு கரையை ஒட்டி தரைதட்டி நின்ற நிலை​யில், சர்​வ​தேச கடல் எல்​லை​யைத் தாண்​டிய​தாக கூறி, படகை​யும் மீனவர்​களை​யும் சிறை பிடித்​துள்​ளனர்.

நமது மீனவர்​களை இலங்கை கடற்​படை​யினர் தொடர்ந்து கைது செய்து வரு​வது மீனவ சமூகத்​தினரிடையே ஆழ்ந்த மனவேதனையை ஏற்​படுத்​தி​யுள்​ளதுடன், அவர்​களின் வாழ்​வா​தா​ரத்தை பாதித்​துள்​ளது. பாக்​ஜலசந்​தியை நம்பி வாழும் மீனவர்​கள் மத்​தி​யி்ல் நிலை​யற்ற தன்​மையை உரு​வாக்​கி​யுள்​ளது.

எனவே, உரிய தூதரக வழி​முறை​கள் வாயி​லாக இலங்கை அரசுடன் பேசி, ஏற்​கெனவே சிறைபிடிக்​கப்​பட்ட அனைத்து மீனவர்​களை​யும், அவர்​களின் படகு​களை​யும் விரை​வாக விடு​வித்​து, பாது​காப்​பாக தாயகம் திரும்ப தேவை​யான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும்.

கூட்டு செயல்​பாட்​டுக் குழு மூலம் இரு தரப்பு பேச்​சு​வார்த்​தையை விரை​வாக நடத்​து​வது மட்​டுமே இது​போன்ற பிரச்​சினை​கள் மீண்​டும் மீண்​டும் நிகழா வண்​ணம் தீர்வு காண்​ப​தற்கு உதவும். மீனவர்​களின் வாழ்​வா​தா​ரம், நலன்​களை பாது​காக்க தாங்​கள் தனிப்​பட்டமுறை​யில் தலை​யிட்டு தீர்வு காண வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles