யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், குடும்பத்துடன் வெளிநாடு செல்ல முன்பு அங்குதான் வளர்ந்தார் என்றும் கூறியுள்ளார்.

“என் அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், அதாவது வட இலங்கையைச் சேர்ந்தவர். அவர் அங்கேயே பிறந்து வளர்ந்தார், பின்னர் அவர்கள் வெளிநாட்டில் குடியேறினர்” என்று அவர் கூறினார்.

இலங்கைக்குச் செல்லும்போது, தனது பாட்டனாரின் (தாத்தா) சொத்துக்களில் ஒன்று தனது குடும்பத்தின் கடந்தகால நினைவுகளுடனான முக்கியமான இணைப்பாக இருப்பதாக ஜேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது “சிக்மா” (Sigma) திரைப்படத் திட்டத்திற்காக இலங்கையை ஒரு படப்பிடிப்புத் தளமாகப் பரிசீலித்ததாகவும், படக்குழுவினர் இடங்களைப் பார்வையிட (Location Scouting) நாட்டிற்குச் சென்றிருந்ததாகவும் அவர் வெளிப்படுத்தினார். இருப்பினும், அந்தத் திட்டங்கள் கைக்கூடவில்லை.

எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தி, இலங்கையின் அழகை உலகிற்கு வெளிப்படுத்த விரும்புவதாகவும் ஜேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles