ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் இரு இடங்களில் தாழிறக்கம்!

மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியின் இரு பகுதிகளில் வீதி தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் பல இடங்களில் புதிய வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாக, ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் வனராஜா தொழிலாளர்களின் குடியிருப்புக்கு அருகாமையில் வீதியின் ஒரு பகுதி பாரியளவில் தாழிறங்கியுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியின் தாக்கத்தின்போதும் இந்தப் பகுதியில் வீதி பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், தற்போதைய சீரற்ற காலநிலையால் அதே பகுதியில் மீண்டும் பாரியளவில் வீதி தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனுடன், வீதியின் பல பகுதிகளில் புதிதாக வெடிப்புகள் மற்றும் சிறியளவிலான பிளவுகள் ஏற்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நோர்வூட் எண்ணை நிரப்பு நிலையத்திற்கு அருகாமையிலும் ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக, மண்ணுக்குள் நீர் தேங்கி, வீதியின் கீழ்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, இந்த தாழிறக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, மத்திய மலைநாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடருமானால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீதி தாழிறக்கம் மேலும் அதிகரிப்பதுடன், புதிதாக பல இடங்களிலும் வீதி சேதமடையும் அபாயம் காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதி, மஸ்கெலியா, நோர்வூட் உள்ளிட்ட பல பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பாதையாக காணப்படுவதால், வீதியில் ஏற்படும் இவ்வாறான பாதிப்புகள் அன்றாட போக்குவரத்துக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, வீதி மேலும் தாழிறங்குவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்துவரும் நிலையில், வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும், குறிப்பாக வீதியில் புதிதாக ஏற்பட்டுள்ள வெடிப்புகள் மற்றும் தாழிறங்கிய பகுதிகளுக்கு அருகில் வாகனங்களை செலுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்துகின்றனர்.

மலைவாஞ்ஞன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles