22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்போம்: பீரிஸ் சூளுரை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஜனநாயக வழியில் தோற்கடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் நீதி அமைச்சர் ஜி.எஸ்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், மேற்படி சட்டத் திருத்தம் அவசியமில்லை என்பதே மகாநாயக்க தேரர்களின் கருத்தாக உள்ளது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles