தொடரும் சோகம்! 3ஆவது முறையாக உலகக்கிண்ண தொடருக்கான நேரடி வாய்ப்பை இழந்தது மே.தீவுகள் அணி

கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல் எனப் பல தலைமுறைகளாக உலகக் கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி, 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான நேரடித் தகுதி வாய்ப்பை இழந்துள்ளது.

சாதனை வரலாறு – 1975, 1979 ஒருநாள் உலகக்கோப்பைகள், 2012, 2016 டி20 உலகக்கோப்பைகள், 2004 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் U-19 உலகக்கோப்பை என மொத்தம் 6 ஐசிசி கோப்பைகளை வென்ற பெருமை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு உண்டு.

தொடர் பின்னடைவு – 2019 மற்றும் 2023 உலகக்கோப்பைகளுக்கு நேரடியாகத் தகுதிபெறத் தவறிய அந்த அணி , 2023-ல் தகுதிச்சுற்றிலும் தோல்வியடைந்து உலகக்கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பையே இழந்தது.

2027 நிலவரம் – 027 தொடரை நடத்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நேரடியாகத் தகுதிபெற்றுள்ளன. எஞ்சிய 8 இடங்கள் ஐசிசி தரவரிசை அடிப்படையில் தீர்மானிக்கப்படும் சூழலில், மேற்கிந்திய தீவுகள் அணி புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்திற்குச் சரிந்துள்ளது.

வாய்ப்பு நழுவியது எப்படி? – அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றதால், வெஸ்ட் இண்டீஸின் நேரடித் தகுதி வாய்ப்பு முறைப்படி பறிபோனது. இனி இந்தியாவுடனான ஒருநாள் தொடரை 3-0 என வென்றாலும் வெஸ்ட் இண்டீஸால் நேரடியாகத் தகுதிபெற முடியாது.

இதன் காரணமாக, தொடர்ந்து 3-வது முறையாக தகுதிச்சுற்றுப் போட்டிகள் (Qualifiers) மூலமாக மட்டுமே மேற்கிந்திய தீவுகள் அணி 2027 உலகக்கோப்பைக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

Related Articles

Latest Articles