22 ஐ உடன் மீளப் பெறவும்: மு.கா. வலியுறுத்து

“நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். எனவே, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான விடயத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுத்த நிலைப்பாட்டையே நாமும் ஆதரிக்கின்றோம்.

22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு சர்வதேச சமூகமும் அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்.

அவ்வாறு மீளப்பெறாவிட்டால், கண்டிப்பாக இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்ளக் கூடாது,” என்று ரவூப் ஹக்கீம்
கூறினார்.

Related Articles

Latest Articles