கனடாமீதான வரிப்போரை இடைநிறுத்தினார் ட்ரம்ப்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீத வரியை இடைநிறுத்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

இந்த தடைகள் அமுலுக்கு வர சில மணி நேரங்களே இருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே கடைசி நேரத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்கான கால அவகாசத்தை வழங்கியுள்ளதுடன், இரு வரலாற்று நட்பு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த பதற்றமான உறவில் மேலும் விரிசல் ஏற்படுவதையும் தற்காலிகமாகத் தடுத்துள்ளது.

“கனடா மற்றும் அமெரிக்கா இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில் (ஆவணங்கள் இறுதி செய்யப்படுவதற்கு உட்பட்டு), நாளை காலை முதல் மூன் அமுலுக்கு வரவிருந்த 50 சதவீத வரியை நான் இடைநிறுத்தியுள்ளேன்” என்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி இந்த வரி விதிப்பு அமுலுக்கு வந்திருந்தால், ஹாக்கி மட்டைகள் முதல் மருத்துவப் பரிசோதனைக்கான tongue depressors வரையிலான பல்வேறு கனடிய பொருட்கள் மீது அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles