‘நாங்கள் திருடர்கள் அல்லர்’ – 2029 இற்கான ராஜபக்சக்களின் ‘புனிதர்’ நாடகம்

கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

“2029 ஆம் ஆண்டு ஜனாதிபதியாவதாகக் கூறிக்கொண்டு, நாமல் ராஜபக்ச இன்று கிராமம் கிராமமாகவும், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் மற்றும் குளங்கள் தோறும் சென்று புதிய பாணியிலான அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

கடந்த காலத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) பல மணி நேரம் விசாரிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில், ‘எனக்கு எதுவுமே தெரியாது, அந்த வீடுகள் எனக்குச் சொந்தமானவை அல்ல’ என ஊடகங்களுக்கு முன்னால் அவர் கூறி வருகிறார்.

ராஜபக்ச குடும்பத்தினரின் இந்த ‘நாங்கள் திருடர்கள் இல்லை’ என்ற நாடகம் நாட்டிற்குப் புதிதல்ல. மல்வானை பகுதியில் பஷில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்ட பிரமாண்ட மாளிகை விசாரணையின் போது ‘எனக்குச் சொந்தமானதல்ல’ எனக் கூறப்பட்டது.

அதேபோன்றுதான் கதிர்காமத்தில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீடும் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டது. உரிமையாளர் இல்லாத சொத்துக்கள் என்று கூறி தப்பிப்பதே அவர்களின் வழக்கம். இறுதியில் அந்த மாளிகைகளைத் தங்களுக்கான விடுதியாகத் தருமாறு பல்கலைக்கழக மாணவர்கள் போராடும் நிலைமை ஏற்பட்டது.

திருடன் ஒருபோதும் தான் திருடன் என்று ஒப்புக்கொள்ளப் போவதில்லை. நாட்டின் பொருளாதாரக் கொலைகாரர்கள் வேறு யாருமில்லை, ராஜபக்ஷ குடும்பம்தான் என்று அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க, இன்று நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஊழலற்ற புனிதர் போல வேடமிட்டு மன்னிப்புத் தேட முற்படுகிறார்.

நீங்கள் செய்த பாவங்களுக்குக் கோவில் கோவிலாக, தேவாலயம் தேவாலயமாக, பள்ளிவாசல்கள் அல்லது விகாரைகளுக்கு சென்றாலும் நிச்சயமாக மன்னிப்பு கிடைக்கப்போவதில்லை. நாட்டின் வரலாற்று ரீதியான பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகளையும் உழைக்கும் மக்களையும் வீதியில் இறக்கிய அநீதி, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் ஆகிய பாவங்களுக்கான தண்டனையை எந்த வழிபாட்டுத் தலத்திற்குச் சென்றாலும் கழுவிவிட முடியாது.

கடந்த காலத்தில் நாட்டின் வளங்களைச் சூறையாடி, மக்களை நடுத்தெருவில் விட்ட அதே கும்பல், இன்று புதிய வடிவத்தில் வந்து உங்களை ஏமாற்றப் பார்க்கிறது. நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான இந்த அரசியல் சக்திகளை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு, இனி ஒருபோதும் ஏமாறாமல் அவர்களை முற்றாக நிராகரிக்க வேண்டும்” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles