வைத்தியசாலையில் தீ விபத்து: 15 பிஞ்சு குழந்தைகள் பலி: பாகிஸ்தானில் சோகம்

இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் குறைந்தது 15 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் நடந்த போது பிம்ஸ் (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் (nursery) 16 குழந்தைகள் இருந்ததாக மருத்துவமனை அதிகாரிகளை மேற்கோள் காட்டி Geo News புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களில் ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் இருந்த ஏர் Air conditioner compressor வெடித்ததன் காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தீ முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் குளிர்விக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles