மாகாணசபைத் தேர்தலுக்கு அஞ்சுகிறதா என்பிபி அரசு?

மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என்றும், அதனை இயலுமானவரை விரைவில் நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

“மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்காத் தேவையான சட்ட ஏற்பாடுகளை நாடாளுமன்றம் செய்து கொடுத்தால் தேர்தலை நடத்த முடியும். தேர்தலுக்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, எல்லை நிர்ணயப் பிரச்சினைக்கு நாடாளுமன்றம் விரைவான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும். எமக்கும் மாகாணசபை நிர்வாகமும், மக்கள் பிரதிநிதித்துவமும் அவசியமாகும்” என்று தெரிவித்தார்.

Related Articles

Latest Articles