உலகளவில் 20வது இடத்திற்கு முன்னேறியது கொழும்பு துறைமுகம்

கொழும்புத் துறைமுகம் 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.44 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய கொள்கலன் மையங்களில் ஒன்றாகத் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.9 சதவீதம் அதிகம் என, அண்மைய Alphaliner தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், 2025-ஆம் ஆண்டின் இறுதியில் உலகளவில் 26வது இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 20-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இது உலகின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களிடையே ஏற்பட்டுள்ள முக்கியமான முன்னேற்றங்களில் ஒன்றாகும்.

2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,972,053 கொள்கலன்களைக் கையாண்ட நிலையில், 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கொழும்பு துறைமுகம் 4,444,034 கொள்கலன்களைக் கையாண்டுள்ளது. இது 471,981 கொள்கலன்கள் அதிகமாகும்.

2025-ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் சுமார் 8.3 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டு சாதனை படைத்திருந்தது.

இந்தத் தொடர்ச்சியான வளர்ச்சி, ஒரு முக்கிய இந்தியப் பெருங்கடல் சரக்குமாற்று மையமாக கொழும்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துகிறது.

துறைமுகத்தின் கொள்கலன் கையாளலில் பெரும்பகுதி சரக்குமாற்றத்தின் மூலமே நடைபெறுவதால், கிழக்கு ஆசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் அனைத்துலக பிரதான மற்றும் துணை வழித்தட வலையமைப்புகளுடன் கொழும்பின் விரிவடைந்து வரும் ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கின்றது.

ஜனவரி முதல் ஏப்ரல் 2026 வரை கொழும்பு துறைமுகம் 2.915 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டது, இது 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 13.9 சதவீதம் அதிகமாகும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles