சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைமைப் பதவிக்கு தற்போதைய தலைவர் Gianni Infantino மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
FIFA பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, Gianni Infantinoஇற்கு கடும் எதிர்ப்புகள் வலுத்தன. அவர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையிலேயே தான் மீண்டும் போட்டியிடவுள்ளதை Gianni Infantino
உறுதிப்படுத்தியுள்ளார்.
போலந்தில் நடைபெற்று வரும் 20 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் சனிக்கிழமை கலந்துகொண்ட Gianni Infantinoவிடம், கடந்த ஆறு வாரங்களில் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழல் குறித்து வருத்தம் தெரிவிக்கிறீர்களா எனக் கேட்டபோது,
“கூற வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன; ஆனால் அதைச் சொல்வதற்குச் சரியான நேரமும் இடமும் வரும்” எனக் கூறி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் Gianni Infantinoவை எதிர்த்துப் போட்டியிட இதுவரை யாரும் முறைப்படி வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.










