நாமலுக்கு ஆதரவாக 12 ஆம் திகதி மொட்டு கட்சி மேடையேறுவாரா ரணில்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்தும் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பார் என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவும் மேடையேறுவார் எனப் பரவி வரும் தகவல்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவிக்கையில்,

“குறித்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு (ஐதேக) அழைப்பு விடுக்கப்படவில்லை. இருந்தபோதிலும், அக்கൂട്ടம் வெற்றியளிக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, அநுராதபுரக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பார் எனக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவையாகும்” என்று குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles