சிம் கார்ட் பெற ‘லைவ் போட்டோ’ கட்டாயம்!

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட மற்றும் கண்டறிய முடியாத மொபைல் சிம் (SIM) கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சிம் கார்டுகளை விநியோகிப்பது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பண்டார ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய, இந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து புதிய சிம் கார்டுகளைப் பெறுவதற்கு ‘நேரடி நிழற்படச் சரிபார்ப்பு’ (Live Photograph Verification) கட்டாயமாக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

சரியாகக் கண்டறிய முடியாத சிம் கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸார் உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரசபைகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே, அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய நடைமுறையின் கீழ், சிம் கார்டை வாங்கும் எவரும் பதிவு செய்யும் இடத்தில் தேவையான அடையாள ஆவணங்களுடன் தமது நேரடி நிழற்படத்தையும் வழங்க வேண்டியது கட்டாயமாகும்.

அத்துடன், 2027 ஆம் ஆண்டிற்குள் மொபைல் பயனாளர்களின் அடையாளங்களை 100 சதவீதம் உறுதிப்படுத்தும் நோக்கில், தற்போதுள்ள பயனாளர்களுக்கும் விரிவான சரிபார்ப்பு முறையொன்றை அறிமுகப்படுத்த TRCSL திட்டமிட்டுள்ளது.

மொபைல் சந்தாதாரர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதை வலுப்படுத்தவும், குற்றச் செயல்களுக்காகத் தொலைத்தொடர்பு சேவைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதுமே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, சாதாரண பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வீண் அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்துவதையே TRCSL நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அதற்கேற்பவே புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மொபைல் வலையமைப்புச் சேவைகளின் தரம் குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டன.

இதற்குப் பதிலளித்த பண்டார ஹேரத், இலங்கையில் சுமார் 30 மில்லியன் இயங்குநிலையிலுள்ள (Active) சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதாகக் குறிப்பிட்டதுடன், சேவைகளின் தரத்தைக் கண்காணிக்கும் போது TRCSL தற்போது பெரும்பாலும் மொபைல் வலையமைப்பு நிறுவனங்களால் வழங்கப்படும் தகவல்களையே நம்பியிருப்பதாகவும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles