தேசிய மக்கள் சக்தியினால் (NPP) பொலன்னறுவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பேரணியில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 12) உரை நிகழ்த்தவுள்ளார்.
“மக்களின் ஆட்சி – ஈராண்டு சாதனை, அனைவருக்கும் முன்னேற்றம்” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பேரணி, பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு கால ஆட்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் பேரணிகளின் ஒரு அங்கமாகவே இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.











