நான் ஒரு அரசியல் நரி: தேசியப் பட்டியலை இலக்கு வைத்தே அநுராதபுரம் உரை
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அநுராதபுரம் கூட்டத்தில் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக அவர் தமிழ் ஈழம் வேண்டாம் எனக் கூறியது ஏன் என கௌசல்யா எழுப்பிய கேள்விக்கு விளக்கமளிக்கையில் அர்ச்சுனா கூறியவை வருமாறு ,
“தெற்கு மக்களின் வாக்குகளையும் பெற்று அரசியல் பேரம்பேசும் சக்தியாக நாம் மாறினால்தான் தமிழ் மக்களுக்கு விடிவு என நான் நரித்தனமாக யோசிக்கின்றேன்.
வடக்கு மாகாணத்தில் அடுத்த முறை நீயும் (கௌசல்யா) நானும் எம்.பியாகிவிடுவோம். எனவே, இந்த இரண்டு எம்.பி. பதவியை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.
அடுத்த தேர்தலில் இலங்கை முழுவதும் எனது கட்சி போட்டியிடும். ஒரு மாவட்டத்தில் 5 ஆயிரம் வாக்குகள் கிடைத்தால்கூட, 125,000 வாக்குகள் கிடைக்கப்பெறும். 3 தேசியப் பட்டியல் சும்மாவே வந்துவிடும்.
இவ்வாறு 7,8 ஆசனங்களைப் பெற்றால் நாம் பேரம் பேசும் சக்தியாக மாறலாம். நான் ஒரு அரசியல்வாதி, ஆனால் முட்டாள் தனமான அரசியல்வாதி அல்லன்.
சிங்கள பகுதிகளில் நாம் எம்.பிக்களை பெற வேண்டும். அதற்காக யாழ்ப்பாணத்தில் கொஞ்சம் வாக்குகள் குறைந்தாலும் பரவாயில்லை.” – என்றார்.
உரையாடல் காணொளி
