30 பந்துகளில் சதமடித்து அபிஷேக் சர்மா சாதனை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரின் மூன்றாவது போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சதத்தை பதிவு செய்துள்ளார் அபிஷேக் சர்மா. இதன் மூலம் இந்திய அணி பல்வேறு சாதனைகளை தகர்த்தெறிந்தது.

இந்தப் போட்டியில், இந்திய அணிக்காக அதிவேக T20 சதத்தையும், சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக மூன்றாவது அதிவேக சதத்தையும் அவர் பதிவு செய்தார். இன்னிங்ஸின் 9வது ஓவரிலேயே வெறும் 30 பந்துகளில் அவர் இந்தச் சதத்தை எட்டினார்.

அவர் தனது முதல் 50 ரன்களை வெறும் 16 பந்துகளில் எட்டினார். இது இந்திய அளவில் நான்காவது அதிவேக அரைசதமாகும்.

நடப்பாண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம், இந்திய அளவில் இரண்டாவது அதிவேக அரைசத சாதனையை அபிஷேக் சர்மா ஏற்கனவே தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டம், இந்திய இன்னிங்ஸின் பாதி நிறைவடைவதற்கு ஒரு பந்து மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், ரஷீத் கான் பந்துவீச்சில் 108 ரன்களுடன் ( 11 சிக்ஸர்கள், 9  பவுண்டரிகள் அடங்கலாக) முடிவுக்கு வந்தது.

மறுமுனையில், இரண்டாவது T20 போட்டியைப் போலவே தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் கவனமாக விளையாடினார். எனினும், பின்னர் அவரும் களத்தில் இறங்கி அடித்து ஆடி இந்தியாவின் ரன் குவிக்கும் வேகத்தை உயர்த்தினார்.

இவ்விருவரின் சிறப்பான கூட்டணியால், பவர் பிளே (Powerplay) ஓவர்களில் இந்தியா 100 ரன்களைக் குவித்து அணியின் புதிய சாதனையைப் பதிவு செய்தது.

தற்போது 17 ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 200 ஓட்டங்களைக் கடந்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles