மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் ஆட்சியை பொறுப்பேற்பீர்களா?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இளைஞர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.

இதன்போது இளைஞர்களால் எழுப்பட்ட பல கேள்விகளுக்கும், ரணில் விக்கிரமசிங்க பதில்களை வழங்கினார்.

அவ்வேளையில் “நாட்டில் மீண்டும் அரசியல், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், ஆட்சியை மீண்டும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டால், அப்போது நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன” என யுவதி ஒருவர் ரணிலிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சிரித்தபடியே பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க,
“ நான் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. எனவே, நாட்டை மீண்டும் பொறுப்பேற்க முடியாது.”- என்றார்.

Related Articles

Latest Articles