காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச்செல்லும் கெல்கமு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக, பொகவந்தலாவை சென்மேரிஸ் தேசிய பாடசாலையின் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள பல கட்டிடங்கள் (20 ஆம் திகதி) வெள்ளத்தில் மூழ்கின.
பொகவந்தலாவை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கொட்டியாகலை தோட்டத்தின் கீழ் பகுதியில் அமைந்திருந்த வீடொன்றின் மீது பாதுகாப்புத் தடுப்புச் சுவர் சரிந்து விழுந்ததில் அவ்வீட்டிற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மண் சரிவு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டிற்குள் இருந்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.










