காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 3ம் மட்டத்தில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து.
இதேவேளை கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 2ம் மட்டத்தில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் தொடரும் கனமழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3ம் நிலை – சிவப்பு அறிவிப்பு (வெளியேறும் எச்சரிக்கை)
பிரதேச செயலக பிரிவுகள் விபரம்
காலி – நெலுவா
களுத்துறை – வலல்லாவிட்ட
கண்டி – பஸ்பாகேகோரலே
கேகாலை – மாவனல்லை, தெரணியகல, அரநாயக்க, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட
நுவரெலியா – நோர்வூட், கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, கொத்மலை மேற்கு
இரத்தினபுரி – இரத்தினபுரி
2ம் நிலை – ஆம்பர் அறிவிப்பு (கவனம் எச்சரிக்கை)
கொழும்பு – பாதுக்க
காலி – நாகொட, தவலம
களுத்துறை – பாலிந்தநுவர, அகலவத்தை, புலத்சிங்கள, இங்கிரிய
கண்டி – கங்கா இஹல கோரலே, உடபலத
கேகாலை – வரகாபொல, புலத்கொ{ஹபிட்டிய, கலிகமுவ, கேகாலை, ருவன்வெல்ல
மாத்தறை – அதுரலிய, கொட்டபொல, அக்குரஸ்ஸ, பிடபெத்தர
நுவரெலியா – தலவாக்கலை
இரத்தினபுரி – பெல்மடுல்ல, குருவிட்ட, அயகம, நிவித்திகல, கலவான, எலபாத
முதலாம் நிலை – மஞ்சள் ஆலோசனை (எச்சரிக்கை எச்சரிக்கைகள்)
கொழும்பு – சீதாவக்கா
காலி – நியாகம, பத்தேகம
கம்பஹா – மீரிகம, அத்தனகல்ல
கந்த – யட்டிநுவர, ஹிலிபுதும்பர, டோலுவ, உடுநுவர
கேகாலை – ரம்புக்கனை
குருநாகல் – அலவ்வ, மாவத்தகம, பொல்கஹவெல, மல்லவப்பிட்டிய
மாத்தறை – பஸ்கொட
இரத்தினபுரி- எஹலியகொட, கஹவத்த, கொலொன்ன, இம்புல்பே
