மலையக இளைஞரின் நேர்மை: கண்டெடுக்கப்பட்ட ரூ. 450,000 பெறுமதியான நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

வீதியில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க கைச்சங்கிலியை Bracelet அதன் உரிமையாளரிடம் கையளிக்குமாறுகோரி, நகையை பொகவந்தலாவை பொலிஸாரிடம் இளைஞரொருவர் கையளித்துள்ளார். அவரின் இந்த நேர்மையான செயலை பலரும் பாராட்டிவருகின்றனர்.

பொகவந்தலாவை சென்ஜோன்டிலரி தோட்ட பிரதான வீதியில் இருந்தே குறித்த தங்க கை சங்கிலி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நகையை பொலிஸாரிடம் ஒப்படைத்த இளைஞர், அது தொடர்பில் சமூகவலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த தங்க கைச்சங்கிலியின் உரிமையாளரான பொகவந்தலாவை, கியூ தோட்டத்தின் கீழ் பிரிவைச் சேர்ந்த சுப்பிரமணியம் மோகன் என்பவர், அதற்குரிய ஆவணங்களுடன் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (20) வருகை வந்துள்ளார்.

பொகவந்தலihவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , பொலிஸ் பரிசோதகர் நுவன் மதுசங்கவிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

இதனையடுத்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், நகையைக் கண்டெடுத்த பொகவந்தலாவை, கிலானி தோட்டத்தைச் சேர்ந்த டி.ஜே. ரமேஷ் என்பவரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து, அவர் மூலமாகவே தங்கக் கைச்சங்கிலியை உரிய உரிமையாளரிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles