அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நாளை (24) நடத்தவுள்ள போராட்டத்தில் தான் பங்கேப்பதற்குரிய சாத்தியம் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
“ குறித்த போராட்டத்தில் பங்கேற்குமாறு எமது கட்சிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே, சஜித் கட்சியின் மேடையில் நான் ஏறமாட்டேன். இனிவரும் காலங்களிலும் சஜித் தரப்பில் மேடையில் ஏறுவதற்குரிய வாய்ப்பு குறைவு.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
