கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் ஹட்டன் கல்வி வலயப் பணிப்பாளரால், பாடசாலை அதிபர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
