அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான வாக்கெடுப்பு நடைபெறும் நாளைய தினம் (25) தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவின் ஒற்றுமை தெளிவாக வெளிப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு இருப்பதால எதிரணிகள் கருத்து வெளியிட்டுள்ள நிலையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய பிரதமர்,
“ எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இல்லை. எங்களுக்கு பொதுவான இலக்கு உள்ளது. நாளை மாலை 158 உறுப்பினர்களின் ஒற்றுமையையும் அனைவரும் காண்பார்கள்” எனக் குறிப்பிட்டார்.
