முட்டையென நினைத்து 3 கோல்ப் பந்துகளை விழுங்கிய பாம்பு

அமெரிக்கா, டெக்சாஸில் பாம்பு ஒன்று , முட்டையென நினைத்து மூன்று கோல்ப் (Golf) பந்துகளை விழுங்கிய நிலையில், அதை உயிருடன் மீட்டெடுத்துக் கால்நடை மருத்துவர்கள் குழு ஒன்று சாதனை படைத்துள்ளது.

தெற்கு டெக்சாஸ் பறவைகள் மற்றும் விலங்குகள் மருத்துவமனை (South Texas Avian & Exotic Hospital) செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) வெளியிட்ட வீடியோவில், பாம்பின் வயிற்றிலிருந்த ஒரு கோல்ப் பந்தை மருத்துவர்கள் மிகவும் கவனமாக வெளியேற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சிகிச்சையின் போது அந்த ஊர்வன விலங்கிற்கு முழுமையான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாகவும், அறுவை சிகிச்சை ஏதுமின்றி பந்துகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது. ]

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கோல்ப் மைதானம் ஒன்றிற்குள் புகுந்த ஒரு பெரிய மலைப்பாம்பு, அங்கிருந்த 3 கோல்ப் பந்துகளைப் பார்த்துள்ளது.

பாம்புகள் பொதுவாக தங்களின் பார்வைத்திறனை விட வாசனை மற்றும் தொடுதல் மூலமே உணவைக் கண்டறியும். இதனால், அந்த பந்துகளை பறவை முட்டைகள் என தவறாகப் புரிந்துகொண்டு, அவற்றை முழுமையாக விழுங்கியுள்ளது.

வழக்கமாக முட்டைகளை விழுங்கிய பின், பாம்புகள் தங்கள் உடலின் உட்புற அழுத்தத்தால் அதன் ஓட்டை உடைத்து ஜீரணிக்கும். ஆனால், விழுங்கியது கடினமான பிளாஸ்டிக் கோல்ப் பந்துகள் என்பதால், அவற்றை உடைக்க முடியாமல் பாம்பின் செரிமானப் பாதையிலேயே அவை சிக்கிக்கொண்டன. இதனால், அந்த பாம்பால் நகரக் கூட முடியாமல் போனது.

இதைக் கண்டறிந்த விலங்கு மீட்பாளர்கள், அந்த பாம்பை உடனடியாக தெற்கு டெக்சாஸ் ஏவியன் மற்றும் எக்ஸோடிக் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள கால்நடை நிபுணர் குழு பாம்பிற்கு லேசான மயக்க மருந்து அளித்தது. அதன்பின், எந்தவொரு அறுவை சிகிச்சையும் செய்யாமல், பாம்பின் உடலை மிக கவனமாக கைகளால் மேல்நோக்கி அழுத்தி, அதன் வாய் வழியாக 3 கோல்ப் பந்துகளையும் ஒவ்வொன்றாக வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.

Related Articles

Latest Articles