ஈரானுடனான போரில் அமெரிக்கா மிக விரைவில் வெல்லும்

ஈரானுடனான போரில் அமெரிக்கா மிக விரைவில் வெல்லும்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர முயலும் மத்தியஸ்தர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் போரில் அமெரிக்கா “மிகவிரைவில்” வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “என்னைப் பொறுத்தவரை நாம் வெற்றிபெறப் போகிறோம்; அது ஏதோ ஒரு வழியில் சாத்தியமாகும். இந்தப் போர் மிக விரைவாக முடிவுக்கு வரும்” என்று கூறினார்.

மேலும், இந்தப் போரில் அமெரிக்கா வெற்றி பெற்ற பிறகு, எரிபொருள் விலைகள் பெருமளவில் குறையும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles